பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

வ.கோ. சண்முகம்

30 வ. கோ. சணி முகம் படைபலம் இழந்தபோதும் பகுத்தறிவுத் தெளிவினாலே கெடுமதிதனைக் கொடுத்துக் கீர்த்தியை வலிவை அழிக்கும் கொடுமதுவால் தன்னை வென்ற குறுக்குவழி ரானா சங்கன் நடைமுறை ஞானம் தன்னை நனிவியந்தே போற்றவானான் மதுவினால் புழுதி மீதே மண்டியிட்டு வாளைப் போட்டே பதவியைப் பவிசைத் தீர பராக்கிரமம் தன்னை இழந்த சதுரங்கப்படையோர் பாபர் சபதத்தைத் தாமும் ஏற்றே எதுவந்த போதும் மதுதான் எம்பக்கம் இனிவரா தென்றார் பானையில் வந்த மதுவோ; பாளையில் வடியும் கள்ளோ; தேனெனும் திராட்டைச் சாறோ திரவியக் காய்ச்சலோ எதுவும் ஆனையைப் பூனையாக்கும் அரக்கன்தான் சைத்தான் தானே ஏன் அது? என்றே கேட்கும் கனுவாதான் இன்றும் பாடம்!