பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வ.கோ. சண்முகம்


அன்னவன் மூலம் அவன்றன் சித்தாராம் தண்டா மிஸ்ஸின் பன்னரும் சக்தி பற்றிப் பராபரியாய்க் கேள்வி பட்டேன்! சின்னவனே இவ்வாறென்றால் பெரியவன் சித்து களுக்குள் பொன்னாக்கும் வித்தை யதுவும் நிச்சயம் புதைந்தி ருக்கும் ! கொண்டுவா, அவனை இன்றே! குளுமையாய் ஆளை இழுப்பாய்! மண்டைக்குள் அவன்வைத் திருக்கும் மகாமந்திர தந்தி ரங்கள் சண்டைகள் முடிவ தற்குள் நமதுடைமைச் சரக்காய் ஆக்கிக் கொண்டுபோய் விடுவோம்; பிறகோ குன்றெலாம் தங் கமாகும்!” என்றிட்டான் அலெக்ஸாண் டர்தான் எள்என்றால் எண்ணெ யதனை நின்றிட்ட இடத்திலேயே நேர்க்கொணரும் திறம்ப டைத்த ஒன்றியதோர் புத்திக் காரன் ஒனஸிக் ரேட்டஸ் உடனே - பன்றியைப்போல் கனைத்துக் கொண்டே பறந்திட்டான் பணியை முடிக்க!