பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 39 தேவனின் பிள்ளை என்றும் தெய்வீக அம்ச மெல்லாம் காவலன் அலெக் ஸாண்டர் பெற்ற கட்டைவிர லுக்குள் அடக்கம் ! சாவற்ற புகழோன் என்றும் துதிபாடித் தீர்க்கி ன்றாயே! நாவறளக் கத்து கின்றாய் ! நான்கூறு வதையும் கேளேன்' உயிர்வதை செய்வோன் எவனும் உண்மையில் மனிதனே ஆகான்! பயிர்விதையைத் தின்றால் கூடப் பாவமாய்க் கருதும் எங்கள் உயிர்சித் தாந்தம் எல்லாம் உங்களுக்கா புரியும்? தூசு மயிர்க்குப்பை போல மக்களை மதிப்போனா தேவ குமாரன்? கொலைரத்தம் குடித்துச் சுவைக்கும் குரூரமா வீர மூச்சு? மலைதாண்டி கங்கை என்னும் மாநதியைக் கூடத் தாண்டி தொலைதுார நாட னைத்தும் சூழ்ச்சியால்; அதர்மத் தாலே வலைபோட்டு பிடித்துக் கொள்ளும் வஞ்சமா தெய்வாம் சமாகும்?