பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 மெழுகுச் சிறகுகள் 47 அத்தருணம் நாரதன்தான் பூலோ கத்தின் அலைகடலின் கரையோரம் நடந்து வந்தான். மெத்தென்றே சதசதக்கும் ஈர மணலின் மேலாகப் புதைந்திருத்த ஒன்றைக்கண்டான்! இடதுகால் விரலாலே, விளையாட் டாக இடறிட்டான் அப்பொருளை நார தன்தான்! குடல்குமுட்டும் அருவறுப்பு: மண்டைஓடு! கோரைப்பல் வாய்திறந்து கிடந்த தங்கே! கலகமுனி அம்மண்டை ஓடு தன்னைக் காரணமே இல்லாமல் வெறித்து வெறுத்து சிலநிமிடம் பாாத்திருந்தான்! மனிததேகச் சிதிலத்தின் ஒருபகுதி! சாவின் எச்சல்! ஒருவனுக்கும் ஒருத்திக்கும் பிள்ளை யாக; ஊழ்வினையின் ரூபமாக வாழ்வு கண்டு நிருபமில்லா அறிக்கையிலா அதிகா ரத்து நிர்வாகிக் காலன்கை வீழ்ந்த மனிதம்'