பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 53 யோகமெனின் பொன்பொருளின் குவியல் தானா? மூவிரண்டாம் அவையூறும் உண்டி தானா? வைரமணி வைத்திழைத்த சுவர்கள் மின்னும் மாளிகையின் பூமெத்தை வாசம் தானா? கைச்சுட்டு விரலாலே அதிகா ரத்தைக் காட்டுகின்றத் தனிஆணை மிடுக்கு தானா? மையிட்டு விழியாலே மாதர்தம்மை மயக்குகிற கலைதண்ணில் திளைத்தல்தானா? பளபளக்கும் பட்டுரையின் ஆப ரணங்கள் பதிரியெனச் சுடர்வீச தேகம் காட்டும் வளமானப் பருவமதாம் வாலி பத்தின் வயணத்தில் மட்டுந்தான் யோக முண்டா? யோகமதே புண்ணியத்தின் பரிசு! அதுதான் யாவருக்கும் சிறிதேனும் எப்போ தேனும் ஆகிவரும் நாள்வந்தால் வந்தே தீரும்! அட்டவணை மாற்றிமிலை தவறிடாது!