பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வ.கோ. சண்முகம்


கீர்த்தியதே அறியாத ஈனப் பிறவி கெட்டலைந்தே நரனொருவன் மண்டை ஒட்டை பேர்த்தெடுத்தே என்னிடத்தில் கொண்டு வந்தப் பெரியோரே! யோசியுங்கள்! யோகம் இதுதான்! துங்கமணி நாரதனின் கைகள் தொட்டுச் சுமப்பதற்கும் நான்முகனின் சன்ன திக்கே பங்கமின்றி வருவதற்கும் இக்கபாலந்தான் பாக்கியந்தான் எவ்வள்வு செய்தல் வேண்டும்! இதுவொன்றே போதாதா நான்வ ரைந்த யோகத்தைக் குறிப்பதற்கு? இன்னும் என்ன புதுயோகம் இவனுக்கே கிடைக்க வேண்டும்? போய்வருவீர்! விதி.எழுத்தே வெற்றி எழுத்தாம்! வேதனவன் விளக்கத்தைக் கேட்ட பின்தான் விதிக்கிரந்தம் மாறாது என்பதையே கீதமுனி உணரலானான் உணர்த்த லானான்! கிஞ்சிற்றும் யோகமிலாப் பிறவி ஏது?