பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

வ.கோ. சண்முகம்


தூங்க வைப்பேன்! சிந்தனை செய்வதும் சீர்து க்கிப் பார்ப்பதும் எனக்கு ஆகாது! வரம்புகள், வரப்புகள் வாரா வதிகள் அனைத்தும் எனக்கே ஆகாத எதிரிகள்! காலமோ இடமோ கணக்கோ, வழக்கோ இருட்டோ வெளிச்சமோ எனக்கே இல்லை! இஷடம் என்றால் ஆயிரம் கைகளால் அணைத்துக் கொள்வேன்! அள்ளிக் கொஞ்சுவேன்! வியர்க்கும் வரையில் விளையாடித் தீர்ப்பேன்’ கயிறு அறுந்த காற்றாடிபோல சட்டென மறுகணம் வேறொர் பக்கம் ஒடிப் போவேன்! ஒதுங்கியே வெறுப்பேன்!