பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

வ.கோ. சண்முகம்


உனது அலுவலோ ஒருசில பொழுதே! சட்ட எனினும் வட்டத் துக்குள் சிலசில பொழுதே ! 'இயக்கம்' என்பதே அறியாத வள்நீ! 'மயக்கம்' என்பதே. 'மருட்சி' என்பதே. தடுமாற்றமே உன்றன் சகாக்கள்! துணைகள்! அஞ்சியே அஞ்சியே அடியெடுத்து வைப்பாய்! ஆனால். நானோ இயக்கும் விதியால் மின்சா ரந்தான்! வேகமே என்றன் பாதங்களாகும்! புயலாய்ப் பாய்வேன்! புதைமண்ணில் திணறும் நொண்டி போலவும் நடப்பேன்; நகர்வேன்! 'இதய அன்போ' 'மூளை அறிவோ'