பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

வ.கோ. சண்முகம்


வாளால் உயிர்கொய்து - ரத்த வரிகளால் கதைஎழுதி தோளால் முரசடித்து - வெற்றித் தோரணம் புகழ்பாட ஆளும் மமதையுடன் - வீர அழகு சுடர்வீச ஏளனப்புன்னகைதான் . உதட்டில் இழைந்திடவே அவன்வந்தான்! மகுட யானையின் மேல் - ரத்தின மாணிக்க அம்பாரியில் திகழும் அணிமணியில் - கலிங்கம் சிந்திடும் விழித்துளியும் புகழின் சாவுகளும் - விழுந்து புரண்டே பளபளக்க நெகிழாக் கல்நெஞ்சம் - தன் புகழ் நெய்திடவே அவன்வந்தான்! வெள்ளமாய் அவன்சேனை ‘வெற்றி வேந்தே!' எனமுழங்க பிள்ளை பெண்கள்எலாம் - கண்ணிர் பிலிற்றும் யந்திரம்போல் உள்ளம் எனும் உறுப்பும் - வெயிலால் உலர்ந்த சுள்ளியென தள்ளாடும் கலிங்கத்தின் - iதிச் சதுக்கத்தின் அவன் வந்தான்!