பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

வ.கோ. சண்முகம்


பூமியைத் தோற்கடித்தோன்! - யுத்த புத்தியைத் தோற்கடித்தான்! காமியாய் இருந்தவன்தான் - துறவுக் காதலைக் கொண்டுவிட்டான்! சேமிப்பாய் வைத்திருந்த ரத்த சீர்த்திகளை உதறிவிட்டான்! சாமியாம் புத்தனின்தாள் - நிழலில் சரண்புகவே துணிந்துவிட்டான்! தேகம் அழியாமல் - ஆத்ம தீதே சுட்டெரிக்க மோகப் பிறப்பழித்தே - ஞான மோனப் பிறப்பெடுத்தான்! சோகம் தனையறியான் - மானுட சோகம் தனையொழிக்க சாகாக் குரலினிலே - அன்புச் சாத்திரமே ஒதிவிட்டான்!