உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

63

“பெரிய மனிதர் இருக்கு மிடத்தை நாடிநான் இந்த வண்டியில் ஏறியதைப் போல் மூட்டைப் பூச்சிகளும் பெரிய மனிதர்களையே நாடுகின்றன; அது நியாயந்தானே.அங்கே அவ்வளவு உபத்திரவமாயிருந்தால் இந்தப் பலகையில் உட்கார்ந்து கொள்ளலாமே” என்றாள். அதைக் கேட்ட ஐயர் அவளுக் கருகில் உட்காருவதை விட எதிரில் உட்கார்ந் திருப்பதே அநுகூலமானதென்று நினைத்துக் கொண்டு, “இல்லை இல்லை. நான் அந்தப் பக்கம் வந்தால் என்னை நாடிவரும் மூட்டை பூச்சிகள் உன்மேலும் திரும்பும்; துன்பமெல்லாம் எனக்கு இருக்கட்டும்” என்று சூரத்தனமாகப் பேசிக் கொண்டே முன்போல அவளுக்கெதிரில் உட்கார்ந்தார். அப்போது அடுத்த ஸ்டேஷன் நெருங்கியது. ஆனால், அதன் கைகாட்டி மரம் இறக்கப் படாமையால் வண்டி ஒரு சோலைக்குள் நின்று விட்டது. இஞ்சின் ஊதிக் கூச்சல் செய்து தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், போர்ட்டரையும் தட்டி எழுப்பியது. “வண்டி ஏன் நின்று விட்டது?” என்று கேட்டுக்கொண்டே கமலம் எழுந்து நின்று குனிந்து தலையைக் கதவிற்கு வெளியில் நீட்டி ஸ்டேஷன் பக்கமாகப் பார்த்தாள். சாமாவையர் தமது ஆசனத்தில் உட்கார்ந்திருந்தபடியே தமது தலையை ஜன்னல் வெளியில் நீட்டி அவரும் ஸ்டேஷன் பக்கம் பார்த்தார். கமலத்தின் தலைப் பின்னலுருக்கருகில் ஜயரது நாசியிருந்தது. அங்கிருந்துண்டான பரிமளகந்தம் ஆநந்தத்தை உண்டாக்கியது. அவரது முழங்கால்களில் அவளது கால்கள் பட்டன. அந்த இரு வகையான இன்பத்திலும் ஈடுபட்டு அவர் மெய்மறந்திருந்த தருணத்தில், கைகாட்டிமரம் இறக்கப்பட்டது. வண்டி ஊதியது. “சரி, வண்டி புறப்படப் போகிறது” என்று சொல்லிக்கொண்டு கமலம் தனது சிரத்தை உட் புறத்தில் வாங்கிக் கொண்டாள். அப்போது வண்டி சடக்கென்று புறப்பட்டது; திரும்பி தன்னிடத்தில் உட்கார முயன்ற கமலம் அந்த விசையினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/64&oldid=1251899" இலிருந்து மீள்விக்கப்பட்டது