உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மேனகா


பெரிய:- ஆ! என்ன ஆச்சரியம்! இவள் சாம்பசிவையங் காருடைய பெண்ணா?

நூர்:- ஆம்.

பெரிய:- அவர் யாரென்பது உனக்குத் தெரியுமா? நான் சேலத்தில் கஜானா டிப்டி கலெக்டராக யிருந்தபோது, அவரும் சேலத்தில் டிப்டி கலெக்டரா யிருந்தவர்; ஆகா! அவர் மகா யோக்கியரல்லவா! அவரைப்போன்ற பரிசுத்தமான மனிதர் ஒருவரும் கிடைக்க மாட்டார்களே! அவர் என்னுடைய அந்தரங்க நண்பரல்லவா! அடாடா! அவருடைய பெண்ணா இந்தக் குழந்தை! என்ன துர்பாக்கியம்! நான் சேலத்திலிருக்கும் போது அவருடைய வீட்டில் இந்தக் குழந்தையைப் பார்த்திருக்கிறேன்; அவர் இந்தக் குழந்தையை எவ்வளவோ அருமையாக வளர்த்தாரே! கடைசியில் இந்த துஷ்டர் வீட்டிலா கொண்டுவந்து கொடுத்தார்! ஆகா! அவருடைய தாயாரைப் போல நல்ல பெண்பிள்ளை உலகத்திலிருப்பது சந்தேகம்! அந்த அம்மாள் மகா விவேகி! அப்படியானால், அவர்கள் இந்த ஊருக்கு வந்திருந்தார்களா?

நூர்:- அவர்கள் இன்று காலையில் வைத்தியசாலைக்கு வந்து மாப்பிள்ளையைப் பார்த்தார்களாம்; அவர்களுக்குப் பதினைந்து நிமிஷநேரம் சாவகாசம் கொடுக்கப்பட்டதாம்; அவ்வளவு நேரமும் விசனித்து அழுதே தீர்த்தார்களாம்; கூடவிருந்த குமாஸ்தா சாமாவையர், மாப்பிள்ளை நேற்று அணிந்திருந்த சட்டையிலிருந்து இரண்டு கடிதங்களை எடுத்து டிப்டி கலெக்டரிடம் கொடுக்க, அவரும் அம்மாளும் படித்தார்களாம். உடனே இருவரும் மிகவும் ஆத்திரமடைந்து பைத்தியம் கொண்டவர்களைப்போல மாறி, அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டார்களாம்; அங்கே நியமிக்கப் பட்டிருந்த வெள்ளைக்கார தாதி இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாளாம்; டாக்டர் துரைஸானி வந்ததும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/87&oldid=1251941" இலிருந்து மீள்விக்கப்பட்டது