பக்கம்:மேரியின் திருமகன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பொன்னும் போளமும் காணிக்கை வைத்தார்
தேவனுக்குத் தாயானதால் தேவதையானாளென்று
வாழ்த்தினார் வணங்கினார் அமலோற்பவியை
தீராத பிணியைத் தீர்க்கும் மருந்து
ஆறாத பசியை ஆற்றும் விருந்து
அன்பு இரக்கம் சகிப்பு பச்சாதாபம்
தருமம் சத்தியம் தவம் ஞானம்
ஆகியவற்றின் மானிடப் பதிப்புதான்
இயேசு கிறிஸ்து, இமானுவேல், மெசியா,

பரிசுத்த ஆவி தந்த பாக்கியம் வாழ்க.
என செல்ல மழலையை அள்ளி எடுத்தார்
உச்சி மோந்தார் உவகை பொங்கினார்
ஏரோதின் எண்ணம் இன்னதென்று புரிந்ததால்
மீண்டும் அவனைக் காணாமல் ஊர் சென்றார்

தலைப் பேற்றை ஆலயத்து காணிக்கையாக்க
சூசை ஏசுவுடன் கோயிலுக்குச் சென்றார்
அங்கே அன்னாள் வந்தாள் ஆசீர்வதித்தாள்
ஆண்டவரின் வருகைக்காக ஆயுள் நீடித்து
காத்திருந்த சிமியோனும் கண்டார் கண்குளிர்ந்தார்
முந்தை ஞானியர் இறைவாக்கு உரைத்தார்
இறைவன் அந்த வாக்கின்படி வந்து உதித்தார்
உலகின் பாவம் தீரும் ஆயினும்
அன்னையின் உள்ளத்தை வாள் ஊடுருவும்
அச்சோதனையே உலகை வெல்லும் சாதனை
என்று வாக்குரைத்தார் விடைபெற்றார்