பக்கம்:மேரியின் திருமகன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

மரக்காலின் கீழே விளக்கை வைப்பதுமில்லை
மலைமேலிருந்த ஊர் மறைவாயிருந்ததில்லை
ஆதலின் உலகுக்கு உதவியாய் ஒளியாய்
நல்லவராகுங்கள். நாளை என்பது இல்லை
இறைவன் உங்களுக்கு இனிமை தருவான்
இறைவாக்குகளை நான் அழிக்க வந்தவனல்ல.
திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தும் அழியாது
நடத்த வந்தேன் நடந்தே தீரும்
இருட்டில் நீங்கள் செய்யும் தவறு
வெளிச்சத்துக்கு வந்தே தீரும்
ஆண்டவன் கட்டளைகளை அனுசரிப்பவன் பெரியவன்
ஆலயத்தில் காணிக்கை செலுத்தும் முன்னால்
அயலவரிடம் மனத்தாங்கலைத் தீர்த்துக்கொள்
விபச்சாரம் செய்யாதே என்றனர் முன்னோர்
பிறபெண்ணை இச்சையுடன் பார்க்காதே என்கிறேன்
ஆணையை நிறைவேற்றன்பது ஆன்றோர் வாக்கு
ஆணையே இடவேண்டாம் என்பதே என் கட்டளை
விண்ணுலகின் மேலென்றால் அது இறைவனின் அரியணை
மண்ணுலகின் மேலென்றால் அது கடவுளின் கால்மனை
எருசலேமின் மேலென்றால் அதுசாலமனின் பொன்னகரப்
உன்தலையின் மேலென்றால் உன்னால் ஒருமுடியை
கறுப்போ வெள்ளையோ ஆக்க முடியாது.
ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறுகன்னத்தை காட்டு
மேலாடையைக் கேட்டால் உள்ளாடையையும் கொடு

2