பக்கம்:மேரியின் திருமகன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மன்னிக்கக் கற்றுக் கொள்வதே அறிவு.
வரம் கேட்காதே உன் தேவை அவனறிவான்
வழிபாடும் செபமும் உன் மனத்தோடு இருக்கட்டும்
வலதுகை இடுவது இடதுகை அறியவேண்டாம்
விண்ணரசு போல் மண்ணுலகும் தெய்வீகம் ஆக
ஆண்டவரை மனமார வாழ்த்து வணங்கு
அவர் பெயர் பரிசுத்தம் எனப் போற்று,

என்றின்ன பல நன்மைகளை போதித்தார்.

இவன் தச்சன் மகன் இத்தனை கருத்துக்கள்
எங்கே கற்றான் என்று வியந்தாருண்டு.
அதிகார போதனை ஆணவப் பேச்சு
இறைவன் மகன் என்பதை எப்படி ஒப்புவது
கண் கொடுத்தான் என்பது கண் கட்டு வித்தை
சாதனைகளென்பது சாத்தானின் கைவேலை
இவனை அழிப்பதே இனி நமக்கு வேலை
என முடிவெடுத்தார் பரிசேயர் சதுசேயர்.

அருளப்பரின் ஆரவாரம்

இன்னொருபால் எதிர்பார்த்த மெசியா இவர்தானென்று
அருளப்பர் ஆரவாரம் செய்தார்.
போட்டிக்கு ஒரு போதகரோ எனக்கேட்டவர்க்கு
இல்லை இனி நான் குறைய வேண்டும்
அவர்வளர வேண்டும் என்பதே திருவருள்
என்பணி முடிகின்றது இறைபணி அவர் முடிப்பார்
இளையவனின் மனையாளை தன்னரசி ஆக்கி