பக்கம்:மேரியின் திருமகன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

ஏரோது பெருந்தவறு செய்து விட்டான்.
ஏனென்று கேட்க வாளுக்குமுன் ஆளில்லை
அன்னாஸ் கைப்பாஸ் அவனுக்குத் துதிபாடுகிறார்
எச்சரிக்கிறேன் ஏரோது திருந்தட்டும் என்றார்
அருளப்பரைக் கொல்லச் சொன்னாள் ராணி,
மக்களின் அன்புக்கு உரியவர் என்பதற்காக
அஞ்சினான் வேந்தன். கொஞ்சினாள் அவள்.
அருளப்பர் சிறைப்பட்டார். ஆயினும் நீதிசொன்னார்
வேந்தனுக்குப் பிறந்தநாள் விழா வந்தது.
ராணி மகள் சலோமி ஆடினாள் அரசவையில்
மதுக்கடலில் நீந்தி மங்கையர் முகக் கடலில்
மீனும் முத்தும் பவளமும் பார்த்திருந்த
தார்வேந்தன் தன்னரசில் பாதிதருகிறேன் என்றான்
அன்னையின் தூண்டுதலால் அருளப்பர்தலை கேட்டாள்
சபைக்குமுன் ஏரோதின் தற்பெருமை தலையசைத்தது
கொடுங்கோலின் விலையாக கொண்டு வந்தார்
தங்கத் தாளத்திலே சான்றோனின் தலையை !
நீதியழுதது நேர்மை தலைகுனிந்தது.

தூயவனை கல்லறையில் தொட்டி லிட்டார் அந்தோ !
இதுசெய்தி கேட்ட ஏசுபிரான் வெதும்பினார்

கோயிலை விடப் பெரியது

சாலமன் நிறுவிய ஆலயப் பிரகாரத்தை
காணிக்கைப் பொருளுக்கு கடைவீதியாக்கினர்
ஆண்டவனுக்கு வீடு அர்ச்சகர்க்கு வாடகைஎன
காவலர் வரிகேட்டனர். கைக்கூலிவாங்கினர்