பக்கம்:மேரியின் திருமகன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

ஆனாலும் பசித்து பட்டினியால் சாவதில்லை
உணவை விட உயிர் மேலானது அன்றோ
அன்றாட உணவை ஆண்டவர் அளிக்கின்றார்
எதை உடுப்பது என்ற கவலை ஏன் ?
காட்டுப் புல்லுக்கும் வண்ணம் கொடுத்தவன்
மானிடரை ஆடையின்றி விடுவானா?
உடையை விட உடல் மேலானது
என்றார்
அங்கிகள் இரண்டிருந்தால் அடுத்தவனுக்கு ஒன்றைக்கொடு
இருவேளைக் குணவிருந்தால் இல்லாதவனோடு பகிர்ந்துகொள்
நீங்கள் இரண்டொருவர் இருக்குமிடந்தோறும்
இறைவன் உங்களிடையே இருக்கின்றான்

போதித்துக் கொண்டேயிருந்தார் பொழுதாயிற்று
பசியோடு எவரையும் அனுப்ப விருப்பமில்லை
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்
ஐயாயிரம் பேருக்கு ஆகாதென்றனர்
இறை புகழ் கூறினார். இருந்ததை பகிர்ந்தார்.
பந்தி நடந்தபின் பன்னிரண்டு கூடை மீந்தது,
இது பிதாசுதனுக்கு செய்த மகிமை என்றார்,
மக்கள் இவரை மன்னராக்கத் துடித்தனர்
சீடர்களை படகேற்றினார். இவரும் நழுவினார்
காற்றடித்தது கடல் கொந்தளித்தது
அப்போது ஓருருவம் அலைமேல் நடந்து வந்தது
ஆவியென்றஞ்சினார். பூதமென்றோலமிட்டார்.