பக்கம்:மேரியின் திருமகன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கொடியோரின் வழி வந்தோரே உங்கள்
முன்னோர் தொடங்கியதை முடித்துக் கொள்ளுங்கள்
உங்களுக்கும் பொதுதீர்வை உண்டென்று
முடித்தார்


மோயீசனின் அருட்காட்சி

ஆண்டவர் ராயப்பர் யாகப்பர் அருளப்பரை
ஒருநாள் உயர்ந்த மலைக்கழைத்து போனார்.
அவரது முகம் கதிரவனைப்போல் ஒளிவீசிற்று
அவரது ஆடைகள் நிலவைப்போல் பளபளத்தன
மோயீசனும் எலியாசும் அங்கே தோன்றி
ஆண்டவருடன் உரையாடினார் அதுகண்ட ராயப்பர்
மூவருக்கும் கூடாரம் அமைப்போம் எனக்கூறினார்
ஒளிரும் மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது
இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம்
நான் பூரிப்படைகிறேன். நீங்கள் செவி கொடுங்கள்

என்று குரல் வானத்திலிருந்து வந்தது
அஞ்சினார் சீடர். ஆற்றினார் ஆண்டவர்
எலியாசும் மோயீசனும் வானில் மறைந்தனரோ
ஏசு பெருமானுடன் இரண்டறக் கலந்தனரோ
சீடர்கள் அறியாது திகைத்தனர் ஆங்கே!

ஆண்டவர் சீடருடன் திரும்பிக் கொண்டிருந்தார்
அப்போது ஒருவன் முழந்தாளிட்டு வணங்கி
என் மகன் நெருப்பிலும் நீரிலும் விழுகிறான்
அடிக்கடி வலிப்பினால் துடிக்கிறான் அவனை
சீடர்கள் குணமாக்கவில்லை என்றழுதான்