பக்கம்:மேரியின் திருமகன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

நான் கிழித்தகோடு தாண்டியது இல்லை
எதிர்த்த மகனுக்கு எத்தனை வரவேற்பென்றான்
உரிமைக்கும் உடமைக்கும் உரியவன் நீயே
உறவுக்கும் விருந்துக்கும் வந்தவன் அவன்
உடன் பிறந்தவன் திருந்தியதற்கு மகிழ்க
இழந்தவனை மீண்டும் பெற்றதற்கு மகிழ்வோம் என்றார்
வருந்தினால் திருந்தினால் வானாடு உண்டு அறிக
முன்னை இறைவாக்கினர் உரைக்கு இலக்கியமாய்
ஆண்டவருடன் மானிடர்க்கு அறுந்த தொடர்பை
மீண்டும் உயிர்ப்பிக்க வந்தேன் உணர்க
உணராத மக்களுக்கு ஐயோ கேடென்றார்


ஏசுவின் புகழ்கேட்டு ஏரோது கலங்கினான்
தான்கொன்ற அருளப்பர் தலைமுளைத்து வந்தாரோ ?
மக்களின் மந்தைக்கு அவர் மேய்ப்பர் ஆனால்
மணி முடியும் செங்கோலும் ஏதாகுமோ என்றஞ்சினான்
அன்னாசும் கைப்பாசும் ஆத்திரப்பட்டார்
அந்தரங்கத்தில் ஆலோசனைக்குச் சபைகூட்டினார்
யூதர்களின் மதத்துக்கு அவன் பகைவன்
கொள்கைக்கு விரோதி கோயிலை இடிப்பவன்
பராபரனின் மகனென்று பாமரரை ஏய்ப்பவன்
பாவனைக் கொன்றாலும் தீராததென்று குமுறினர்
அப்பத் திருவிழா அடுத்து வந்தது
அதுவேளை ஆண்டவரைப் பிடித்தல் ஆகாது.
மக்கள் கொதிப்பார். மண்ணில் கலகம் வரும்
ஆதலின் பொறுத்திருப்பதென்று முடிவெடுத்தார்
அவர்களின் உளவுக்கு உறவானான் யூதாஸ்