பக்கம்:மேரியின் திருமகன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


இறுதி உரை

ஆண்டவரும் மக்களிடை இறுதி உரையாற்றினார்
இறைவன் பொதுத்தீர்வை கணக்கெடுக்கப்போகின்றான்
ஆபேலிலிருந்து அருளப்பர் வரையில்
ஆன்றோர்களின் ரத்தத்தை குடித்த கொடுமைக்கு
உத்தரம் கேட்க நேரம் வந்து விட்டது
முன்னைய நியதி என்று மோயிசனை பழிபோட்டு
தேவ கற்பனைகளை விற்பனை செய்வதற்கு
தண்டனை தரும் நாள் நெருங்கி விட்டது
நெருங்கிற்று அழிவு எருசலேமுக்கு என்றார்
மீட்கவந்த மேய்ப்பனை உணரவில்லை,
பசித்திருந்தேன் புசியென்று சொல்லவில்லை
தாகத்தால் துடித்தேன் குடிநீர் கொடுக்கவில்லை
உடையின்றி தவித்தேன் பழங்கந்தையும் போர்த்தவில்லை
நோயுற்று நொந்தேன் மருத்துவம் செய்யவில்லை
குருடாகித் தடுமாறினேன் கோலொன்றும் கொடுக்கவில்லை
போதனைகள் செய்தேன் செவிகொடுத்து கேட்கவில்லை
என்றதும், எப்போது நாங்கள் இரைமகனை
புறக்கணித்தோம் என்று கேட்டார்
உங்கள் வழி நடையில் வருந்தி நின்ற
எளியவனைப் பார்த்தும் பாராத போதெல்லாம்
அந்தக்குறை எனக்கே வைத்தீர் என்றுணர்வீர்
ஏழைக்குச் செய்த உதவி இறைவனுக்கே செய்ததாகும்
இறைவன் பலிகேட்கவில்லை இரக்கத்தையே விரும்புகின்றான்
உள்ளம் கலங்காதீர், இந்த உலகுக்கு நான்