பக்கம்:மேரியின் திருமகன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

தெய்வக் கோட்பாடுகளை சிதற அடிக்கிறான்.
இறைமகன் தானென்று இறைவனைப் பழிக்கிறான்.
ஆதலின் தண்டனைக் குரியவன் என்றனர்.

மதத்துக்கு எதிர்ப்பென்றால் குருக்கள் கேட்கட்டும்
வேண்டாத விசாரணை இங்கே வேண்டாம் என்றான்
எங்களுக்குக்கொல்ல அதிகாரமில்லை
கொண்டு வந்தோம் கலிலேயனை என்றார்
அவனொரு கலிலேயன் என்றதும் பிலாத்து
ஏரோதின் அரசுக்கு இட்டுச் செல்லுக என்றான்.
எருசலேமுக்கு ஏரோதிடம் இழுத்து வந்தனர்
ஏசுவின் புகழைக் கேட்டிருந்த ஏரோது
அற்புதங்கள் செய்வார். அறிவுரைகள் ஆற்றுவார்
ஆசி வழங்குவாரென்று அறிவுரைகள் எதிர்பார்த்தான்.
அவர்தவத்துக்கு மோனச்சிலையாக நின்றார்
ஞான விளக்காக எரிந்தன விழிகள்
மவுனம் நிரபராதி என்று சொல்லிற்று.
சாந்தம் மனதிலே வணங்க வைத்தது.
சான்றோனாகத் தெரிகின்றார். சத்தியமே ஜொலிக்கிறது
குற்றம் புரிந்திருந்தால் பிலாத்து விட்டிருக்கமாட்டான்
ஆனாலும் கேட்கின்றேன் இவர்களுக்கு என்னபதில்
பேசுக என்றான். அவர் பேசவில்லை
ஊமையை பேச வைத்த நீர் ஊமையாக நிற்பதேன் ?
உண்மைக்கு சாட்சி எங்கே என்று அதட்டினான்
அருளப்பரின் ஆவியே என்சாட்சி என முறுவலித்தா
வேந்தனுக்கு முகம் வியர்த்தது அதிர்ந்தான்
பிலாத்தின் ஆளுகையில் பிடித்திருக்கின்றீர்