பக்கம்:மேரியின் திருமகன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

அன்னைக்கு இதோ உன் மகன் என்றார்.
கொலைக்குன்றில் சூழ்ந்திருந்த மக்களை
காவலர் துரத்தினர். காலமும் துரத்திற்று.
ஆண்டவரின் உடைக்கு சீட்டுப் போட்டனர்
இருண்டது வானம். மருண்டனர் காவலர்
இரண்டாகக் கிழிந்தது தேவன் கோயில்திரை !
இயற்கை அதிர்ந்தது. இறை மகனும் இறைஞ்சினார்.
தந்தையே ! நான் தரவேண்டிய விலை என்னவோ
நேரமிகுந்தது, இன்னும் பூத உடலில் புழங்கவோ
உமது கையில் எனது ஆவியை
ஒப்படைக்கிறேன் என்று உரக்கக் கூவினார்
இறைவனும் இவரை மகிமைப்படுத்தினார்

தெய்வ மலர்

விழித்தெழுந்த காவலர்க்கு ஏசு இறந்திருந்தார்,
ஈட்டிக் கொண்டு ஊடுருவக் குத்திப்பார்த்தார்
ஆண்டவரிடம் பற்று மிகுந்திருந்த சூசை
அரசனிடம் அனுமதி பெற்று வந்தார்
சிலுவையிலே பூத்த தெய்வ மலரை
பரித்து மரியாளின் மடியிலிட்டார்
அவர் தனக்கென்று அமைத்திருந்த கல்லறையை
தேவனின் திருச்சடலம் குடியிருக்கக் கொடுத்தார்
அடக்கம் செய்தனர் அடங்கவில்லை துக்கம்