பக்கம்:மேரியின் திருமகன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.


5. விசுவாசப் பிரமாணம்


பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிருஸ்துவை விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்துக் கன்னி மரியாயிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கஞ் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர் களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென்.


6. பத்துக் கற்பனைகள்


சர்வேசு வரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து

  1. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே. நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக..
  2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லா திருப்பாயாக.
  3. சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
  4. பிதாவையும் மாதாவையும் சங்கித் திருப்பாயாக.
  5. கொலை செய்யாதிருப்பாயாக.