பக்கம்:மேரியின் திருமகன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

  1. மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
  2. களவு செய்யாதிருப்பாயாக.
  3. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
  4. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
  5. பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்தப் பத்து கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்

  1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.
  2. தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது.


7. திருச்சபைக் கட்டளைகள்
  1. ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.
  2. வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்கிறது.
  3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவநற் கருணை உட்கொள்கிறது.
  4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும் ஒரு சந்தி

நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது.

  1. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கல்யாணம் செய்யாதிருக்கிறது.
  2. நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்கிறது.


8. உத்தம மனஸ்தாப மந்திரம்

சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து