பக்கம்:மேரியின் திருமகன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


11. கிருபைதயாபத்து மந்திரம்

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் சிவியமே. எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க !பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கன வாயிலே நின்று பிரலாபித்தழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே தயாபரியே. பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே !

முத : இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு - நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக
துணை : சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக

சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா, முத்திப்பேறு பெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமுஞ் சரீரமும் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினிரே! அந்தத் திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கும்படிக்குக் கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுகளை யெல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

▢ ▢ ▢