பக்கம்:மேரியின் திருமகன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கட்டளைக்கு சாட்சியாக வாழ்ந்தனர்
அலகை புகுந்தது நிபந்தனை மீறினர்.
பழத்தைப் புசித்தனர், ஜெகத்தைப் பெருக்கினர்
இறைவனைப் பகைத்தனர். இயற்கை என்றனர்
உருவிலே மானிடம் உணர்விலே மிருகம்
நினைவிலே ஆணவம் தலைவிரித்து ஆட
உலகம் என்பது கலகம் ஆனது.
மோயீசன் எலியாஸ் எரோமியாஸ் சாலமன்
என்று பல சான்றோர்கள் உலகுக்கு வந்தனர்
இறைவாக்கு உரைத்தனர் நீதிகளை நிர்ணயித்தனர்
ஏற்கவில்லை எதிர்நடை போட்டது ஆக
படைத்தவனுக்கே உலகம் பந்தயமாயிற்று
நாட்கள் யுகங்களாக நடந்து கடந்தது.
மலையிலே பிறவாமல் மழையிலே பெருகாமல்
ஓடும் யோர்தான் நதியின் தீரத்தில்
ஆண்டவன் அமைத்த ஏதேன் பூங்கா
யூதேயா கலிலேயா சுமேரியா எனச்சிதறி
ரோமர் வாள் நிழலில் நொறுங்கிக் கிடந்தது,
தாவீது சாலமன் ஆண்ட திருக்குலம்
வறுமைப் பினியில் அடிமைத் தளையில்
வருந்திற்று, இறைவனுக்கு இரக்கம் பிறந்தது
மனுக்குலத்தை மீட்க மனம் வைத்தான்.

அருளப்பரின் தோற்றம்

திருக்கோயில் உள்ளரங்கில் தூபவேளையில்
சக்கரியா முன்தரிசனம் ஆனான் கபிரியேல்