பக்கம்:மேரியின் திருமகன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

வம்சம் நினக்குத் தழைக்க என வாழ்த்தினான்
வயது முதிர்ந்தேன் வலுவும் தளர்ந்தேன்
என்தலைவி எலிசபெத்தும் இளமை இழந்தாள்
தெய்வத் திருவாக்கு பலிப்பதெப்படியோ ?
கேள்விக்குறி எழுந்தது கிழவன் நோக்கில்
ஆண்டவர் அருளில் உனக்கு ஐயப்பாடோ ?
உண்மை விளங்கும்வரை நீ ஒரு ஊமை,
ஆண்டவரின் வழியை செம்மைப்படுத்தவரும்
நின்மகனுக்கு அருளப்பன் என்றபெயர் சூட்டு
எனச்சொல்லி மறைந்தான் கபிரியேல்
வெளியில் சொல்ல முடியவில்லை இவனுக்கு,
எலிசபெத் தாயான கேலிக்கு வெட்கினாள்
மலடி என்றபழி அகன்றதற்கு மகிழ்ந்தாள்


இறைமகன் வருகை

கபிரியேல், கன்னி மரியாளுக்குத் தோன்றினான்
அன்னையே நீ செய்த புண்ணியம் என்னையோ
ஆண்டவர் உன்னோடு வாழி என்றான்
அகமகிழ்ந்தாள், அவனருளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தாள்
தேவன் அவளுக்குத் திருமகன் ஆகும்
தித்திக்கும் செய்தி சொன்னான், திடுக்கிட்டாள்
மன்றலுக்கு வரவில்லை மங்கலம் முழங்கவில்லை
கணவன் என்கைத்தலம் பற்றவில்லை
கன்னிநான் கருத்தாங்குவதோ எனக்கலங்கினாள்
ஆண்டவன், திருவருள் அதுவென்றால், மறுப்பென்ன