பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

முன்னுரை

வீரம், வினேத்திட்பம் ஆகியவை அவருடைய விசேஷ குணங்கள். அவருடைய உண்மையான பெருமைகளை யெல்லாம் அயர்லாந்து விடுதலை அடைந்த பிறகுதான் உலகம் தெரிந்துகொள்ள முடிந்தது. இன்றும் அவரே அயர்லாந்துக்கும் அதன் அரசாங்கத்திற்கும் தலைவராக விளங்குகிரறார்.

காலின்ஸ் (1890-1922) கிரிபித்தைப் போன்ற தத்துவஞானி' அல்லன் டி'வேலராவைப் போன்ற படிப்பாளியும் அல்லன். அவன் கர்ம வீரன், மகா புத்திசாலி. கிரிபித்தைப் போல் நெடு நாள் வாழ்ந்து சுயராஜ்ய மாளிகைக்கு அவன் அஸ்திவாரம் போடவில்லை ; டி'வேலராவைப் போல் பிற்காலச் சீரமைப்புகளுக்குத் தலைமை வகித்து நடத்தவுமில்லை. ஆனால், 1916 முதல் கொந்தளித்துப் பெருகி வந்த சுதந்திரப் புரட்சி வெள்ளத்தில் நடுநாயகமாய் நின்றவன் அவன்தான். அதனால்தான் அவனைப் பிடித்துக் கொடுப்பவருக்குப் பதினாயிரம் பவுன் பரிசளிப்பதாக அரசாங்கம் விளம்பரம் செய்தது !

அந்தக் காலத்திலே அயர்லாந்தின் நிலைமை மிகப் பயங்கரமாயிருந்தது. நகரங்களில் எல்லாம் ஊரடங்குச் சட்டம் ; பெரிய கட்டிடங்களை எல்லாம்.அரசாங்கப் படைகள் எரித்து வந்தன்; முக்கியமான தேசியத் தலைவர்களை ரகசியமாகக் கொலை செய்து வந்தன ; தொண்டர்களும் மற்ற இளைஞர்களும் சிறைகளிலும் போலீஸ் தாணாக்களிலும் சித்திரவதை செய்யப்பட்டனர். எங்கும் பயங்கர ஆட்சி நிலவி வந்தது. அப்போது ஐம்பதியிைரம் பிரிட்டிஷ் துருப்புகள் அயர்லாங்கில் இருந்தன. அவைகளுக்கு உதவியாக, மேற்கொண்டு நாற்பதினாயிரம் துருப்புகளும் சேர்க்கப்பட்டிருந்தன. புதிதாக மேலும் ஒரு லட்சம் விசேஷத் துருப்புகள் தேவை என்று சர்ச்சில் துரை கூறிவந்தார் இத்தனை விஷயங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், அயர்லாங்கில் கடந்தது பிரிட்டிஷ் ஆட்சியா, அல்லது பிரிட்டிஷ் யுத்தமா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். ஆட்சி என்ற பெயரால், உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை அடக்குவதாகக் காரணம் சொல்லி வெளி உலகத்தை ஏய்த்துக்கொண்டு, பிரிட்டன் அயர்லாந்தின்மீது ஒரு கோர யுத்தத்தையே தொடுத்து நடத்தி வந்தது. 1939-ல் ஹிட்லர் போலந்தின்மீது பாய்ந்ததற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால், பல நூற்றாண்டுகளாக அயர்லாந்தில் இப்படித்தானே செய்து வந்தேன் !’ என்று பிரிட்டன் ஒரு சமாதானம் சொல்லலாம். உண்மைதான்: அயர்லாந்தில் மட்டுமா ? இந்தியாவிலும், எகிப்திலும், தனக்கு ஒண்டுவதற்கு இடம் கிடைத்த ஒவ்வொரு நாட்டிலுமே, பிரிட்டன் இப்படித்தானே செய்து வந்தது !