பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மைக்கேல் காவின்ஸ் F= அவன் அதைப் படித்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்ந்தான். இவ்வாறு இரவு முழுதும் அர சாங்க மாளிகையில் வேட்டையாடிவிட்டு, அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பின்ை. இரவு முழுதும் அாக்கங் கொள்ளாத அவ்விரன் மறுநாள் பகலில் டெயில் ஐரான் கூட்டத்திற்கும் தவருது சென்ருன். காலின்ஸ் தன் கட்சியின் வலிமையை மிகைபட எண்ணி மயக்கம் கொள்பவனில்லை. ஆதலால் டெயில் ஐரானின் அங்கத்தினர்களும், தொண்டர்களும், இதர லின்பினர்களும் அரசாங்க ஒற்றர்களால் தொடரப்பட் டும், துன்பு அறுத்தப்பட்டும் வருவதைக் காணும் பொழுது, அவன் தானும் தோழர்களும் பிறந்த காட்டிலே வே ருர்போல் நடத்தப்பட்டதை நினைத்து வருந்தின்ை. சகல அதிகாரமும் டப்ளின் மாளிகையில் தங்கி யிருக்கும் பொழுது, குடியரசு என்பது பெயரளவுதான் அன்ருே ? ஒற்றர்கள் தாங்கள் தொண்டர்களைத் தொடர்ந்தால் அபாயம் என்பதைக் காட்டச் சொற்ப எச்சரிக் கையாவது செய்யவேண்டு மல்லவா ? இவ்வாறு அவன் எண்ண மிட்டுச் சில ஏற்பாடுகள் செய்தான். பசு நடக்க ஆரம் பித்தால், கன்றுகள் துள்ளிப் பாயுமல்லவா ? சில தொண்டர்கள் துப்பறியும் அதிகாரியாகிய ஹால்லி என் பவனுடைய வீட்டிற்குள் புகுந்து சோதனையிட்டு அட்ட காசஞ் செய்தனர். வேறு சில தொண்டர்கள் ஒபிரியன் என்னும் துப்பறியும் அதிகாரியை நடுத்தெருவில் பிடித்துக் கயிற்ருல் கட்டி உருட்டி விட்டனர். கயிறு களுடனும் கம்புகளுடனும் ஆரம்பமான இந்தச் சண்டை, பின்னல் துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் உபயோ கிக்கப்பட்ட பெரும் போராய் மூண்டது. *