பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மைக்கேல் காலின்ஸ் அவர்கள் போகும் வரை காலின்ஸ்-சம் அவன் தோழர் களும் மேல் மாடியிலேறி, அடுத்த விட்டின் மாடியில் மறைந்து கொண்டிருந்துவிட்டுப் பின்னல் திரும்பி வந்த னர். அன்றிரவு அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு மான்ஷன் மாளிகையில் பொதுஜன வரவேற்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அவர்கள் வரும்பொழுதும் பட்டாளத் தார் அவர்களே வழிமறித்துச் சோதனையிட்டனர். ஆங்கில ஆட்சியின் ருசியை அவர்கள் நேரிலும் தெரிந்து கொள்ளவேண்டு மல்லவா ? இரண்டு மூன்று தினங் களுக்குப் பின் அவர்கள் பாரிஸ்-க்குத் திரும்பினர். அப்பிரதிநிதிகள் அங்கு சென்ற பின், லாயிட் ஜார்ஜ் அவர்களுடைய மனநிலை அயர்லாந்துக்கு அது கூலமா யிருந்ததைக் கண்டு, பேட்டி யளிக்க மறுத்து விட்டார். அவர்கள் பிரசிடெண்டு வில்ஸ்னேக் கண்டு பேசினர்கள். ஐரிஷ் ஜனங்களுக்குச் சமாதான மகா காட்டில் தங்கள் கோரிக்கையைக் கூற உரிமை அளிக்க வேண்டும் என்று ஐக்கிய மாகாணச் சட்டசபை திர் மானித்திருந்தும், வில்ஸன் தம்முடைய அதிகார் தோரணையில் ஒன்றும் செய்ய முடியாது என்றும், தனிப் பட்ட முறையிலே இயன்ற சகாயம் செய்வதாயும் கூறினர். இது வெற்றுரை என்று அறிந்து வால்ஷ் முதலியோர் வருந்தினர்கள். இடையில் அப்பிரதிநிதிகள் தாங்கள் அயர்லாங் தில் கண்டும் கேட்டும் வந்த விஷயங்களே யெல்லாம் ஒர் அறிக்கையாக வெளியிட்டனர். அது எங்கணும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கிவிட்டது. அயர்லாங் தில் பயங்கர ஆட்சி நடப்பதையும, தேசபக்தர்கள் கைதிகளாக கடத்தப்படும் கொடுமையையும், கிரபராதி