பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 18 மைக்கேல் காலின்ஸ் பொறுப்பு அதிகரித்து வந்தது. அவன் டெயில் ஐரா னின் உளவு இலாகாத் தலைவனுயும் நியமிக்கப்பட்டு, தனக்குக் கொடுக்கப்பட்ட நான்கு பதவிகளேயும் வகித்து, இடைவிடாது உழைத்துவந்தான். ஒற்றுக் கேட்பது அவனுக்கு வெகுநாள் பழக்கம். முதன் முதலாகத் தக்க ஒற்றர் கூட்டத்தை அமைத்துக்கொண் டால்தான் அதிகார வர்க்கத்தை எதிர்த்து கிற்கமுடியும் என்பது அவனுக்கு மிக நன்ருய்த் தெரியும். ஆல்ை, ஒற்றுக் கேட்பதற்குத் தக்க நபர்களேக் கண்டுபிடிப்பது கஷ்டமா யிருந்தது. அவன் லியான் டோபின் என்பவனைப் பிரதான உளவு அதிகாரியாக நியமித்துக்கொண்டான். உளவு இலாகா மெதுவாகவே வளர்ந்துவந்தது. காலின்ஸ் மிகத் தேர்ந்த நண்பர்களேயே அந்த இலாகா வுக்கு நியமித்து வந்தான். இவர்களேத் தவிர, அரசாங்க ஒற்றர்களிலும் சிலர் அவனுக்கு வழக்கம்போல் உதவி புரிந்துவந்தனர். ஆங்கில ஒற்றர் படையை எதிர்த்து நாடெங்கனும் சுற்றிப் போராட்டங்கள் செய்வதற்காகப் பறக்கும் தொண்டர் படை ஒன்றும் நிறுவப்பட்டது. வெடி குண்டுகள் செய்வதற்காகப் பார்னல் தெருவில் ஒரு தொழிற்சாலே ஏற்படுத்தப்பட்டது. காலின்ஸ் தனக்கு நண்பரான பிராய், மக்கமாரா என்னும் இரு ஒற்றர்களே யும் வாரம் தவருமல் சந்தித்துப் பகைவரின் நடவடிக்கை கள் யாவற்றையும் தெரிந்துகொண்டு வந்தான். அதிகாரி களும் ஒற்றர்களும் கையாளும் ரகசிய பாஷையின் பொருளேத் தெரிந்துகொள்ளவேண்டிய துட்பமான குறிப்புகளேயும் அவன் கன்ருய்த் தெரிந்துகொண்டான். பகைவரின் கடிதங்கள் பல அவன் கைக்கு வந்து சேரு வதற்குத் தக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இவ் வாருக ஒற்றர்களேயே ஒற்றுப் பார்க்கும் கடின