பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*120 மைக்கேல் காவின்ஸ் லிமெரிக் சிறையில் வைக்கப்பட்டிருந்த நோயாளி யான ஒரு தொண்டன் ஏப்ரல்மீ 6-வ வேறு தொண்டர் களால் வெளியே கொண்டுபோகப் பட்டான். அன்று நோயாளியைச் சூழ்ந்து போலிஸார் பாதுகாத்து நிற் கையில் திடீரென்று ஆயுதங் தாங்கிய தொண்டர்கள் அங்கு புகுந்தனர். ஒரு போலீஸ்காரன் நோயாளியைப் பார்த்துச் சுட்டான். அதனுல் அவன் அபாயமான காய மடைந்தான். அதே சமயத்தில் தொண்டர்களும் சுட் டனர். முதலில் சுட்ட போலீஸ்காரன் மடிந்து விழ்க் தான் ; மற்றும் நான்கு போலீஸாரும் வார்டர்களும் காயமடைந்தனர். தொண்டர்கள் கைதியைத் துரக்கிக் கொண்டு மறைந்தனர். ஆனல், அந்த நோயுற்ற தொண் டன் மறுநாள் இறந்துபோனன். இதிலிருந்து லிமெ ரிக்கில் சில நாள் ராணுவச் சட்டம் அமல் நடத்தப்பட் டது. ஏப்ரல்மீ 20-வ ஒரு தொண்டர் படை அரக்லின் என்னுமிடத்தில் போலிஸ் படைவீடுகளேத் துணி வுடன் தாக்கி, போலீஸாரை ஜயித்து, அங்கிருந்த ஆயு தங்களேயும் வெடிமருந்தையும் கைப்பற்றிக் கொண் -ஆil. இத்தகைய காரியங்களெல்லாம் தனிப்பட்ட சில தொண்டர்களின் செயல்கள் என்று எண்ணிவிடக் கூடாது. இவை யாவும் தலைமை ஸ்தலத்திலிருந்த அதி காரிகள் வேண்டுமென்றே அமைத்த திட்டத்தின்படி நிகழ்ந்தவை. இவை சம்பந்தமாகத் தொண்டர் படை யின் பத்திரிகையாகிய அன் டோக்லக் 'கில் வெளிவந்த நீண்ட அறிக்கையில் காணப்பட்ட விஷயமாவது : எதிரி யின் ஆயுதந்தாங்கிய சிப்பாய்களாயினும், போலீஸா ராயினும், அவர்களே நம் மேல் படையெடுத்துவந்த அங்