பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மைக்கேல் காவின்ஸ் கப்படும் தொகைகளுக்குக் கடன் பத்திரங்கள் கொடுக் கவும், நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வட்டியுடன் முதலேச் செலுத்துவதாக உறுதி கூறித் துண்டுப் பிரசுரங்கள் முதலியவற்ருல் பிரசாரம் செய்யவும் வேண்டியிருந்தது. அயர்லாந்தில் கடன் தொகை வகு லிப்பது எளிதான வேலையன்று. ஒவ்வொரு துறையி லும் அரசாங்கம் எதிர்த்து வந்ததால், மிகவும் கவன மாகப் பண வசூல் செய்யவேண்டியிருந்தது. வசூல் வேலை வரவு செலவு மந்திரியின் வேலையாத லால், காலின்ஸ் அதைத் தீவிரமாகச் செய்ய முற்பட் டான். ஹார்க்கோர்ட்டு தெருவில் அவன் காரியாலயம் இருந்தது. தேசத்தின் பல பாகங்களிலும் கட்டுப்பாடாக வசூலிப்பதற்குப் பொறுப்புவாய்ந்த நால்வர் நியமிக் கப்பட்டனர். அவர்கள் அவன் உத்தரவின் பேரில் தங்களுக்கு வேண்டிய உதவியாட்களே நியமித்துக் கொண்டு வேலை செய்து வந்தனர். சிறைக்குள் சிக்காது வெளியேயிருந்த டெயில் ஐரான் அங்கத்தினர் ஒவ் வொருவரும் தத்தம் பகுதியில் வசூலுக்குப் பொறுப்பா யிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஸின்பினர்கள் மட்டு மின்றி, மற்ற எல்லாப் பொதுஜனங்களிடமும் வசூல் செய்யவேண்டும் என்பதைக் காலின்ஸ் வற்புறுத்தின்ை. தன்னுடைய சிப்பந்திகள் கவனிக்காத மூலே முடுக்குகளி லுள்ள இடங்களேயும் குறிப்பிட்டு அங்கெல்லாம் பணம் திரட்டவேண்டும் என்று அவன் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் அனுப்பிவந்தான். காலின்ஸின் தலைமைக் காரியாலயமே தினந்தோ அறும் போலீஸ் கண்டத்திற்கு உட்பட்டிருந்தது என்ருல், வசூல் வேலை எவ்வளவு கஷ்டமானது என்பதை நாமே