பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

முன்னுரை

தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பழைய சரித்திரத்தைப் பகைப்புலமாக வைத்துக்கொண்டே இந்தப் புரட்சியை நாம் காணவேண்டும்.

ஐரிஷ் தேசபக்தர்கள் ஐந்து பேர்கள் ஓரிடத்தில் கூடிப் பேசிக் கொண்டிருந்தால், அந்த இடத்தில் அவர்கள் பல பழைய வீரர்கள், பெரியார்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக் கேட்கலாம். ஒருவர், 'ஓ'கானல் மாதிரி உழைக்க வேண்டும் என்பார். 'வுல்ப் டோன் இரண்டு காதல்கள் கொண்டிருந்தார் ; ஒன்று அருமை மனேவியிடத்தில், மற்றது அருமை அயர்லாந்திடத்தில் !' என்பார் மற்ரறொருவர். 'ஓ’நீல்! ஓ'நீல்' என்பார் மூன்றாமவர். 'தாமஸ் டேவிஸுக்குப் பின்பு அவரைப் போன்ற மகாவீரர்களைக் காணவில்லையே! என்பார் நான்காமவர். ஐந்தாமவர், பார்னலைப் பற்றியோ, டெரென்ஸ் மாக்ஸ்வினியைப்பற்றியோ, டிவேலரா, கிரிபித், அல்லது காலின்ஸைப் பற்றியோ பேசுவார். வீடு வாசல், கடைச் சரக்குகள், நிலவரி, உலக நிலைமை ஆகிய எதைப்பற்றி அவர்கள் பேசுவதாயினும், இடையிடையே மேலே கூறிய பெரிய மனிதர்களின் பெயர்கள் அடிக்கடி கூறப்படுவது நிச்சயம். அவ்வளவு தூரம் அந்தப் பெரியார்களின் வாழ்க்கையும் செயல்களும் நவீன அயர்லாந்தின் சரித்திரத்தில் ஊடும் பாவுமாய்ப் பின்னியிருக்கின்றன. அயர்லாந்தின் சரித்திரத்தில் அவர்கள் தோன்றிய கட்டங்கள் முக்கியமானவை.

யர்லாந்து பசுமையான சிறு தீவு ; ஜாவாவைவிடச் சிறியது. அதன் நிலப்பரப்பு சுமார் இரண்டு கோடி ஏக்கர் ; ஜனத் தொகை அரைக் கோடிகூட இல்லை-சுமார் 45-லட்சம்தான். இங்கிலாந்துக்கு மேற்கே அது மிகவும் சமீபத்தில் இருக்கிறது. அதன் ஸ்தானமே அதற்கு உலகத்தில் ஒரு முக்கியத்தை அளிப்பதோடு, அதன் சரித்திரத்தையும் ஓரளவு உருவாக்கியிருக்கிறது. கிழக்கே ஐரோப்பா கண்டத்துடனும், மேற்கே புது உலகமான அமெரிக்கா கண்டத்துடனும் அது தொடர்பு கொண்டிருக்கிற்து. ஐரிஷ் ஜனங்களில் பலர் அமெரிக்காவில் குடியேறியும் வசித்து வருகிருர்கள். ஐரோப்பிய நாகரிகமும் அமெரிக்க நாகரிகமும் அயர்லாந்தைப் பல வழிகளிலும் பாதித்து வருகின்றன. அதே சமயத்தில், அது ஒதுக்கமாக இருப்பதால், இரண்டு கண்டங்களின் நிகழ்ச்சிகளிலிருந்தும் ஓரளவு விலகியிருக்கவும் வசதி ஏற்படுகிறது.