பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்பாடுகள் 127 காலின்ஸ் தன் காலம் முழுவதையும் வசூலுக்கு மட்டுமே செலவிடவில்லை. அதி தீவிரமான காரியங்கள் பலவற்றிற்கு அவன் தலைமை வகித்து நடத்தின்ை. தொண்டர்களேக் கொண்டு பல சூரத்தனமான வேலே களேச் செய்வித்தான். ஆல்ை, தன் முக்கியமான கவனம் நிதி வசூலை விட்டுச் சிதறிவிடாமலும் பார்த்துக்கொண் டான். வசூலுக்காக ஜில்லாக்களின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களே அரசாங்கம் தடை செய்தது. கூட்டங்கள் யாவும் ஒதுக்கமான இடங்களில் ரகசியமாக நடைபெற வேண்டியிருந்தன. சர்க்காருக்குப் பயந்து, முல்லிங்கார் என்னும் இடத்தில் இடுகாட்டில் ஒரு கூட்டம் கூடிற்று என்ருல், அடக்குமுறையின் வேகங் தான் என்னே !! மேலும் வர்த்தகர்களும் குடியானவர் களும் கொடுக்கும் உண்டியல்களே நேராக வரவு செலவு மந்திரிக்கு’ என்று அனுப்ப முடியவில்லை. அரசாங்கம் நாணயச்சாலைகள் அவ்விலாசத்திற்குப் பணம் கொடுக் கக்கூடாது என்று விதித்தது. அதனல் முதலில் பண மெல்லாம் சில தனிப்பட்ட நபர்களின் பேரால் நாணயச் சாலைகளில் போடப்பட்டுப் பின்னர்தான் காலின்ஸின் கைக்கு வந்து சேர்ந்தது. கடன் பத்திரங்களும் விளம் பரங்களும் அச்சிட்டுத் தயாரிப்பதிலும் பெருங் கஷடம் விளேந்தது. ஆனால், காலின்ஸ் டப்ளின் மாளிகைக்கு வெகு சமீபத்திலேயே உள்ள டோல்லார்டு அச்சுக் கூடத்தில் சாமர்த்தியமாக அவற்றைத் தயாரித்துக் கொண்டான். நிதிக்கு அயர்லாந்தில் வசூலானதோடு, வெளிநாடு களிலிருந்த ஐரிஷ்காரர் பலரிடமிருந்தும் பணம் வந்தது. சைன, இந்தியா, ஆஸ்திரேலியா முதலிய தொலையிடங்