பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 i. மைக்கேல் காவின்ஸ் கடந்துவந்தது. அதுவே குடியரசின் தேசீயப் படை யாக அமைந்திருந்தது. டெயில் ஐரானின் பாதுகாப்பு மந்திரியே அதை நடத்திவந்தார். நாளடைவில் அது ஐரிஷ் குடியரசுப் படை யென்றும் அழைக்கப்பட்டது. 1918-ம்u) தொண்டர்களுடைய வருஷாந்த மகாநாடு கூட்ட முடியாமற் டோகவே, 1919-ம் வருஷத்திலாவது கூட்டவேண்டுமென்று பலர் விரும்பினர். மகாநாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய காலின்ஸ் நியமிக்கப் பட்டான். அவன் தீர்க்காலோசனை செய்து பார்த்த தில், தேசத்தின் பல பாகங்களிலிருந்து தொண்டர் படையின் அதிகாரிகள் டப்ளினுக்கு வருவதல்ை, ஒற்றர் களால் பெரும் துன்பம் விளையுமென்றும், தொண்டர் படையே சீர்குலைந்து போகுமென்றும் உணர்ந்தான். ஆதலால், மகாநாட்டைக் கூட்டாம லிருக்கவேண்டு மென்று முடிவு செய்தான். தலைமைக் காரியாலயத்தி லுள்ளவர்கள் தீவிரமான வேலைகள் யாவற்றிலும் காலின்ஸின் அபிப்பிராயத்தையே ஏற்றுக்கொள்வது வழக்கம். அவனே மகாகாடு வேண்டாமென்று திர் மானித்ததும், யாவரும் அம்முடிவை ஏற்றுக்கொண் டனர். போலிஸ்காரர்களில் ஒருவரிருவர் ஆங்காங்கு சுட் டுத் தள்ளப்படும் விஷயமாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளே எடுத்துக்கொண்டது. ராணுவ நீதி ஸ்தலங்கள் சந்தேகப்பட்டவர்களேக் கடுமை யாய்த் தண்டித்தன. பல நிரபராதிகள் வீணுகத் தண்டனை யடைந்தனர். வார்ட்டன் என்னும் ஒற்றன் சுடப்பட்ட வழக்கில், ஜான் ஹர்லீ என்னும் மாஜி சிப்பாய் ஒருவன் 12.வருஷக் கடுங்காவல் தண்டனே பெற்ருன். அவனுக்