பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== போர் முழக்கம் 131 கும் அவ் வழக்குக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. ஆல்ை, வார்ட்டன் சுடப்பட்ட மைதானத்தில் பத்திரிகை விற்றுக்கொண்டிருந்ததே அவன் குற்றம். காலின்ஸ்ை அவ்வழக்கில் சம்பந்தப்படுத்துவதற்காக, ஹர்லி பொய்ச் சாட்சி சொல்லுமாறு போலீஸார் எவ்வளவோ கட்டாயப் படுத்தினர். அவன் கடைசி வரையில் மறுத்துவிட்டான். (அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கைக்குப் பின்னல், காலின்ஸ் அவனே விடுதலை செய்து அயர்லாந்தின் தேசியப் படையில் சேர்த்துக்கொண்டான்.) ராணுவ நீதி ஸ்தலங்கள் ஒரு குற்றமும் செய்யாத பலருக்கு மரண தண்டனே விதித்தன. அவற்றின் நோக்கமெல்லாம் யாரையாவது தண்டித்தாக வேண்டும் என்பதுதான். சுடப்பட்ட வார்ட்டன் காயம் குணமாகிப் பிழைத்துக்கொண்டான். ஆல்ை, அடுத்தாற்போல் ஒற்றர்களில் ஸார்ஜண்டு பார்ட்டன் என்பான் நவம்பர்மீ. 29-ம் தேதி கலாசாலேத் தெருவில் சுடப்பட்டு மடிந்தான். அயர்லாந்தின் கவர்னர் ஜெனரலான லார்டு பிரெஞ்ச் கடுங் கோபமடைந்து, * சமீப காலத்தில் போலீஸார் சுடப்பட்டது சம்பந்தமாகக் குற்றவாளிகளேக் கண்டுபிடிப்பதற்குத் தக்க துப்புக் கூறுவோர்க்கு 5,000 பவுன் பரிசளிக்கிருேம் என்று விளம்பரம் செய்தார். ஒரு வருஷக் காலம் இடைவிடாது உழைத்து, காலின்ஸ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரகசியப் போலிஸ் வர்க்கத்தையே கிலே குலையும்படி செய்ய ஆரம்பித்தான். ஒற்றர்களிலே முக்கியமான ஆறு பேர்கள் அவனுக்கு உற்ற தோழராய் விளங்கி, அரசாங்கத்தின் அந்தரங் கங்கள் யாவற்றையும் அறிவித்து வந்தார்கள். மற்றும்