பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

9

ஐரிஷ் மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். வடபகுதியான அல்ஸ்டர் மாகாணத்தில் பெல்பாஸ்ட் நகரில் மட்டுமே கப்பல் கட்டும் தொழிலை மேற்கொண்ட பெரிய தொழிற்சாலைகள் உண்டு. தெற்கே, அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் மட்டுமே சில தொழிற்சாலைகள் உண்டு. மற்றப்படி நாடு முழுதும் விவசாயமும் குடிசைத் தொழில்களுமே கிறைந்திருக்கின்றன. இவைகள் எல்லா மக்களுக்கும் போதிய ஊதியம் அளிக்க முடியாததாலும், பெரிய தொழிற்சாலைகள் இல்லாததாலும் ஜனங்கள் நாளடைவில் வெளிநாடுகளில் குடியேற விரும்புவது இயற்கை. வட அயர்லாந்தில் உள்ளவர்கள் இருக்கிற தொழிற்சாலைகளில் புகுந்து வேலை பார்த்துக் கொள்கின்றனர் ; தென் பகுதியிலுள்ளவர்களே அதிகமாக அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குடியேறி யுள்ளனர்.

உலகத்தின் கலைச் செல்வத்திலும் ஐரிஷ் மக்கள் போதிய அளவு பங்கு கொண்டுள்ளனர். கோல்ட்ஸ்மித், டீன் ஸ்விப்ட், ஷெரிட்ன், ஆஸ்கார் ஒயில்ட், ஸ்டீபன்ஸ் போன்ற ஐரிஷ் ஆசிரியர்களும் கவிஞர்களும் ஆங்கிலத்தில் எழுதிப் பெரும் புகழ் பெற்றவர்கள். 'ஆசியாவின் ஆஸ்தான கவிஞர்' என்று உலகம் புகழும் நம் கவிஞர் ரவீந்திரநாத் டாகுரின் நண்பரான ஈட்ஸ் (1865-1939) என்ற ஐரிஷ் தேசியக் கவிஞர் ஏராளமான கவிகள் எழுதியிருக்கிறார். நம் கவிஞரின் 'கீதாஞ்சலி'யை ஆங்கிலத்தில் படித்து அதுபவித்து, அதை வெளியிடுவதற்கு இவரே காரணஸ்தரா யிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் டாகுரின் பெருமையை அறிவதற்கு முன்பே அவர் தெரிந்துகொண்டுவிட்டார். ஆங்கில மொழியில் நவீன எழுத்தாளராகச் சிறந்து விளங்கிய ஜேம்ஸ் ஜாயிஸும் (1882-1941), சர்வதேசப் புகழ்பெற்று விள்ங்கும் நாடக ஆசிரியரான பெர்னார்ட் ஷாவும், 'பஞ்சம்', 'நிலம்' முதலிய பிரசித்தமான நாவல்களும் பல கதைகளும் எழுதியுள்ள லியாம் ஒ'பிளாஹர்ட்டியும் அயர்லாந்தின் புதல்வர்கள். மேலும், இசை வாணர், விஞ்ஞானிகள், சைத்திரிகர் முதலிய கலைவாணர் பலருக்கும் அந்நாட்டில் குறைவில்லை.

யர்லாந்தின் பூர்வ சரித்திரத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிருர்கள். முதலாவது மிகப் புராதன காலம், அதாவது கிறிஸ்தவ மதம் அங்கு பரவுவதற்கு முன்னால் வீர காவியங்களும் போர்வீரர்களைப் பற்றிய பரணிகளும் ஏற்பட்டிருந்த