பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முழக்கம் 137 யிற்று. ஜூரிகள், அவன் லார்டு பிரெஞ்சைத் தாக்கிய முயற்சியில் கொல்லப்பட்டான் ' என்று முடிவு கூறி, அவனுடைய சுற்றத்தாருக்குத் தங்கள் அனுதாபத்தைச் செலுத்தினர். விசாரணையின் போது அவன் கற்குண சீலன் என்றும், அவனது அளவற்ற வீரத்தாலேயே மரணம் நேர்ந்தது என்றும் சொல்லப்பட்டது. ஆஷ்டவுண் போராட்டம் ஆங்கிலத் துருப்புக வளிடையே பெருங் குழப்பத்தை விளைவித்தது. சிப்பாய்கள் துாங்கும் பொழுதுகூடத் தொண்டர்கள் தங்களேத் தாக்குவதாகச் சிம்ம சொப்பனம் கண்டு வந்தனர். ஒரு நாள் பிரிட்டிஷ் பத்திரிகைகள் எல்லாம் வைசராய் மாளிகை தாக்கப்பட்டதாக விரிவான செய்திகளை வெளி யிட்டன. தொண்டர்கள் வைசராய் மாளிகைக்குச் செல் ഓഖഥാ, தாக்கவுமில்லை ! உண்மை என்னவென்றல், இரவில் மனக் குழப்பமடைந்த காவல் சிப்பாய்கள் அம் மாளிகைக்கு வெளியே சென்றுகொண்டிருந்த ஸிவில் உத்தியோகஸ்தரான கென்னடி என்பவரைக் கொன்று விட்டார்கள். இந்தச் சம்பவத்தைத்தான் ஆங்கிலப் பத்திரிகைகள் தொண்டர்களின் போராட்டமாக வரு ணித்தன. மரண விசாரணையில், கென்னடி குத்திக் கொல்லப்பட்டு வீழ்ந்த பின்னரும், இரண்டு சிப்பாய்கள் அவரைச் சுட்டதாக வெளியாயிற்று. சிப்பாய்கள் தங்கள் சர்க்கார் உத்தியோகஸ்தர் ஒருவரையே குத்திக் கொன்று, அவர் இறந்த பின்னும் மீண்டும் மீண்டும் சுட்டனர் என்ருல், அவர்களே ஆட்டிவைத்த கிலி எத்தன்மையது இதுதான் கொரில்லாச் சண்டையின் மர்மம். தொண்டர்கள் சில குண்டுகளைச் சுடுவதில் ஆரம்பிக்கும் வேலையைக் கிலி பின்னல் பூர்த்தி செய்து வந்தது !