பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முழக்கம் 147 யிடப்பட்டது. அங்கு ஒகானருடைய மனேவியையும் குழந்தைகளேயும் தவிர வேறு யாரும் இல்லை. ரெட் மண்டு அதற்கு அடுத்த விட்டையும் சோதனையிட்டார். அங்கும் பயனில்லை. அவர் திரும்பிச் செல்லுகையில், ஒகானர் மனேவியைக் கண்டு, இனிமேல் நான் தங்களே மறுபடி இப்படித் தொந்தரவு செய்யவில்லை! என்று மரியாதையாய்க் கூறிச் சென்ருர். இவ்வார்த்தை பின் ல்ை உண்மையாயிற்று. ஏனெனில், பின்னல் தொண் டர்கள் அவரை இவ்வுலகிலேயே வைத்திருக்க வில்லை. மூன்று தினங்களுக்குப் பிறகு, ஹார்க்கோர்ட்டு தெருவில் தாம் வசித்துவந்த ஸ்டான்டர்டு விடுதிக்குச் செல்லும் பொழுது, ரெட்மண்டு தொண்டர்களின் குண்டுபட்டு மடிந்தார். அச்சமயத்தில் அவர் தம் உடைகளுக்குள்ளே இரும்புக் கவசம் அணிந்திருந்தும் பயனில்லாது போயிற்று. டப்ளின் போலீளை ஒற்றுக்கேட்கும் தொழி லுக்கு உபயோகிப்பது மேற்கொண்டு பயனற்றது என் பதை இச்சம்பவம் தெளிவாக்கியது. பின்னர் ரெட் மண்டின் ஸ்தானத்திற்கு வந்த அதிகாரி அடங்கி ஒடுங்கி வாழ்ந்து வந்தார். ஒகானர் வீட்டுச் சம்பவத்திலிருந்து ஜேம்ஸன் மீது மிகுந்த சந்தேகம் உண்டாகிவிட்டது. ஆயினும், சந்தே கத்தை வெளிக் காட்டாமல் அவனே மேற்பார்த்து வரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. உண்மை என்னவெனில், ஜேம்ஸன் டப்ளின் மாளிகையின் ஒற்ற னல்லன்; சீமையிலுள்ள புகழ்பெற்ற ஒற்றள் இலாகாவின் தலைமை ஸ்தலமான ஸ்காட்லண்டு யார்டிலிருந்து அனுப் பப்பட்டவன். அவன் மேற்சொன்ன நிகழ்ச்சிக்குப்பின் தன் மேலதிகாரிகளுக்கு அறிவிப்பதற்காக இங்கிலாந்து சென்ருன். பின் அங்கிருந்து திரும்பி வந்து, அவன்