பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மைக்கேல் காவின்ஸ் Hor டோபினேயும் கல்லெனேயும் கண்டு தன்னேக் காலின் லிடம் அனுப்பும்படி பன்முறை வற்புறுத்தினன். அவ் விருவரும் இதைக்கண்டு சந்தேகப்பட்டனர். ஜேம் ஸனுக்கு ஒரு குழி தோண்டி, அவன் அதில் விழுகிருஞ. என்று பார்ப்பதற்காகக் காலின்ஸ் ஏற்பாடு செய்து வைததான. ஜேம்ஸன் பட்டாளப் படைவீடுகளுக்குச் செல்வ தற்குரிய அதுமதிச் சீட்டு ஒன்றை முன்னுல் டோபி ணுக்குக் கொடுத்திருந்தான். அவன் இங்கிலாந்தி. லிருந்து வந்ததும், அதைத் திரும்பக் கேட்டான். டோபின் காலின்ஸைக் கலந்துகொண்டு பதில் சொன் -னன். காலின்ஸின் தஸ்தவேஜ-கள் அயோன டிரைவ் ' என்னும் இடத்தில் இருப்பதாயும், அவற்றில் 5-வது எண்ணிட்ட பெட்டியில் 31-வது தஸ்தவேஜ-க் கட்டில் அந்த அதுமதிச் சீட்டு இருப்பதாயும் அறிவித்தான். அவன் குறித்த வீடு டப்ளின் நகர மாஜி முனிசிபல் தலைவரும், பரம ராஜவிசுவாசியுமான ஜே. ஜே. பார்ரல் என்பவருடையது. அன்றிரவே பார்ரலுடைய விட்டைப் பட்டாளத்தாரால் கடுமையாகச் சோதனையிட்டனர்! பார் ரல், ராஜபக்தரான தமது வீட்டில் ஏன் இப்படிச் சோதனை நடக்கிறது என்பதை அறியாமல், ஒரு மூலை. யில் நின்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார் ! மறு நாள் பொதுஜனங்களும் இச்செய்தியை அறிந்து பேராச்சரியம் அடைந்தனர். o இவ்வாறு ஜேம்ஸன் காலின்ஸைப் பிடிப்பதற்கு இரண்டாவது முறை முயன்றும் தோல்வி யடைந்தான். மீண்டும் சீமைக்குச் சென் மூன். ஆனால், விரைவில் திரும்பிவந்து, டோபினேக் காண விரும்பினுன், அவனேச்