பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I50 மைக்கேல் காலின்ஸ் ஒன்றைத் தயாரித்தார். 1919 முடிவில் அம்மசோதா வெளியாயிற் று. அதன்படி அயர்லாந்தை இரண்டாகப் பிரித்து, வடகிழக்கு அல்ஸ்டரிலுள்ள ஆறு தாலுகாக் களுக்கு ஒரு தனிப் பார்லிமெண்டு கொடுக்க ஏற்பா டாயிற்று. ஐரிஷ் மக்களில் அல்ஸ்டர் வாசிகளுக்கும் பிற மாகாணத்தாருக்கும் மதவேற்றுமை காரணமாகப் பிளவு இருந்தது உண்மைதான். அந்தப் பிளவை அரசியலில் சட்டபூர்வமாக நிலைநிறுத்துவதன் நோக்கம் என்ன ? அவர்களாக அடக்கமுடியாத ஐரிஷ் மக்கள் தங்களுக் குள்ளேயே போராடி மடியட்டும் என்பதே ஆங்கில ராஜ தந்திரிகளின் நோக்கம். ஐரிஷ் மக்களிடையே காணப் பட்ட வேற்றுமையை அவர்களே ஒழித்துக்கொள்ள வேண்டும். அவ்வேற்றுமையின் வளர்ச்சிக்கு அங்கிய ஆட்சியே காரணம். வேற்ருர் விலகும்போது, வேற்றுமை யும் ஒழியும். அன்றியும், வேற்றுமை ஒழியும்போதும், வேற்ருர் விலக நேரும். இக்காரணத்தாலேயே ஆங்கி லேயர் அயர்லாந்தைப் பாகிஸ்தான் செய்ய விரும்பினர். அத்துடன், உலகில் அமெரிக்கர் போன்ற முக்கியமான நாட்டார்கள் அயர்லாந்துக்காகப் பரிவு கொண்டு தங்களே வெறுக்கா வண்ணம் ஒரளவு சுதந்திரத்தைக் கொடுக்கவேண்டும் என்பதும் அவர்கள் எண்ணம். ஆனல் ஸின்பினரோ, கால், அரை, முக்கால் சுதந் திரத்தை வேண்டினரில்லை , வடுப்படாத பரிபூரண விடு தலேயே வேண்டி நின்றனர். அரை குறையான சுதந்திரம் -தேசத்தை இரு கூருக்கும் சுதந்திரம்-அவர்களால் வெறுத்து நீக்கப்பட்டது. இக்காலத்தில் ஐரிஷ் போலீஸின் இன்ஸ்பெக்டர் ஜெனரலான ஸர் ஜோஸப் பைர்ன் என்ற கத்தேர்லிக்கர்