பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i52 "" மைக்கேல் காலின்ஸ் 1920, ஜனவரியில் அயர்லாந்து முழுதும் முனிசிபல் தேர்தல்கள் நடைபெற்றன. எங்கு பார்த்தாலும் வலின் பீனர்களே மகத்தான வெற்றி பெற்றுவந்தனர் டப்ளின், கார்க், லிமெரிக், வாட்டர்போர்டு முதலிய முக்கிய நகரங்களிலெல்லம் ஸின்பினர்களே மேயர்களாக (நகர சபைத் தலைவர்களாக) நியமிக்கப் பெற்றனர். கார்க் நகருக்கு தாமஸ் மக்கர்டெயின் மேயராக வந்தார். (இப் பெரும் வீரர் அரசாங்க ஒற்றரால் படுகொலை செய்யப் பட்ட கொடுமையைப் பின்னர் கூறுவோம்.) டப்ளின் நகருக்கு டாம் கெல்லி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். அவர் அப்பொழுது இங்கிலாந்தில் கைதியாக இருந்தார். இக்காலத்தில் காலின்ஸ் ஒற்றறிதல், தொண்டர் படை கிர்வாகம், வரவு செலவு இலாகாவுக்குக் கடன் சேர்த்தல் முதலிய பல வேலைகளிடையே கிடந்து உழன்று கொண்டிருந்தான். அவன் அறிவுபெற்ற நாள் முதலாய்த் தொண்டிற்குக் கையையும் தேசத்திற்கு உள்ளத்தையும் திறையாக வைத்தவன். ஆயினும், அவனுக்கு இரண்டு கைகளும் ஒர் உள்ளமுந்தானே உண்டு அவற்ருல் எவ்வளவு வேலேயைத்தான் செய்ய முடியும் டெயில் காரியாலயத்தில் வேலை செய்யும் முக்கியஸ்தர் எல்லோரும் திடீர் திடீரென்று கைதி செய்யப்பட்டு வந்தனர். இதல்ை தொடர்ந்தாற்போல் வேலே செய்ய வழியில்லை. நோக்கும் திசை யெல்லாம் அரசாங்க எதிர்ப்பு திரண்டு கின்றது. ஆயினும், காலின்ஸின் இடைவிடாத முயற்சியால் 80,000 பவுன் கடன் நிதி சேர்ந்தது ; மொத்தம் ஒரு லட்சம் பவுன் வாக்களிக்கப்பட்டது. ஐரிஷ் மக்களின் தேசபக்தியைக்