பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

11

இருந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அதிகாரமும் செல்வாக்கும் வளர்ந்து வந்தன.

பின்னால், எலிஜபெத் மகாராணியின் காலத்தில், அயர்லாந்தைச் சம்பூரணமாக அடிமைப்படுத்தும் வேலை பூர்த்தியாயிற்று. அக்காலத்தில் இரண்டு பெரிய ஐரிஷ் தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களில் ஒருவரான ஜேம்ஸ் பிட்ஜ்மாரிஸ் என்பவர் ஆங்கில ஆட்சியை எதிர்த்து, சரித்திரத்திலேயே முதல் முறையாகப் பல போராட்டங்களை நடத்தினார். அவர் காலத்தில்தான் ஐரிஷ் தேசிய இயக்கம் பிறந்தது என்று சொல்லலாம். ஜனங்களுக்குள் ஒற்றுமை வளர ஆரம்பித்ததும் அப்போதுதான். பிட்ஜ்மாரிஸ் காட்டிய வழியிலே இரண்டாவது தலைவரான ஓ’நீல் மேலும் பல போராட்டங்களுக்குத் தலைமை வகித்து நடத்தினார். ஆரம்பத்தில் அவர் ஆங்கில அரசாங்கத்திற்கு உதவியாயிருந்த போதிலும், பின்னல் ஐரிஷ் மக்களின் உணர்ச்சியையும் கொதிப்பையும் மதித்து, அவர்களின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் மகா சூரராக விளங்கியதால், பற்பல போராட்டங்களில் ஆங்கிலத் தளகர்த்தர்களை ஒருவர்பின் ஒருவராக முறியடித்து வெற்றிகொள்ள முடிந்தது. அவருடைய வெற்றிகளால், ஜனங்கள் தேசீய வெறியும், கதந்திர வேட்கையும் மிகுந்து விளங்கினர்கள். ஆனால், ஓ'நீலுடன் அடிமைத்தனத்தின் இழிவான சகாப்தம் முடிந்து போவதாயில்லை. கடைசி முறையாக், அவர் தென்னாட்டில் இருந்த ஐரிஷ் பிரபுக்களின் உதவிக்காகச் சென்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில், அவர் தோல்வியடைய நேர்ந்தது. வெற்றி கிடையாது என்று தெரிந்திருந்தும், ஆபத்து வேளையிலே அவர் தம் சகாக்களை ஆதரிக்க முன்வந்தார். 1603-ம் ௵, கௌரவமான நிபந்தனைகளின் பேரில், அவர் எதிரிகளிடம் சரணடைந்தார். அப்பால், நான்கு வருஷம் கழிந்து, அவரும் அவருடைய சகாக்களும் இத்தாலியிலுள்ள ரோம் நகருக்குத் தப்பி ஓடிவிட்டனர். மேற்கொண்டு அவர்கள் தாய் நாட்டில் தங்கியிருந்திருந்தால், அதிகாரிகள் அவர்களைப் பல வகையில் துன்புறுத்தி ஆயுள் பரியந்தம் சிறைவைத்திருப்பார்கள்.

ஓ’நீல் ஓடிச் சென்றதே அரசாங்கத்திற்கு அதிர்ஷ்டமாயிற்று. தட்டிப் பேச ஆளில்லை. எதிர்த்துக் கிளம்பினால் என்ன நேரும் என்பதை அரசாங்கம் பலமுறை தன் தண்டப் பிரயோகங்களால் காட்டியிருந்தது. ஊர் இரண்டுபட்டால்தான் கூத்தாடிக்கு எளிது என்றபடி அயர்லாந்தைப் பிளவுபடுத்தி