பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 மைக்கேல் காவின்ஸ் மெயில் வண்டியை ஒருநாள் கால் 8-30 மணிக்குச் சில தொண்டர்கள் வழிமறித்து, எல்லாக் கடிதங்கிகளயும் கொள்ளேயிட்டுப் போயினர். கவர்னர் ஜெனாலிலிருந்து, காரியதரிசி, உதவிக் காரியதரிசி, ராணுவம், போலிஸ் முதலிய பதின்ைகு இலாகாக்களுக்கு உரிய முக்கிய மான கடிதங்களெல்லாம் தொண்டர்களுக்குக் கிடைத்த தால், பல அரிய ரகசியங்கள் வெளியாயின. பின்னல் காலின்ஸ் அக்கடிதங்களேத் தக்க வழியில் பயன்படுத் திக்கொண்டான். அன்று முழுதும் பட்டாளத்தார் .டப்ளின் நகரின் பல பாகங்களேயும் திரும்பத் திரும்பச் சோதனையிட்டனர். ஆயினும், கடிதங்கள் போனவழி புலப்படக்காணுேம். காலின்ஸின் பெயா இதுவரை பொதுஜனங்களுக குத் தெரியாமல் இருந்தது. இப்பொழுது யாவரும் அவனே நன்கு அறிந்துகொண்டனர். போலீஸாரிடத் அதும் சிப்பாய்களிடத்தும் அவனுக்கு நேரும் கித்திய கண்டங்களும், அவன் அவற்றிலிருந்து தப்பும் விந்தை களும் நாடெங்கும் பரவின. அரசாங்கமும் அவனே தனது குலப் பகைவன் என்று அறிந்தது. டப்ளினுக்கு வரும் தொண்டர் படை அதிகாரிகள் முக்கியமான அF )ெ விஷயங்களுக்கும் அவனேயே கண்டு பேசிவந்தனர். அரசாங்கம் அவனே ப் பிடிப்பதற்கு ஏராளமான பணச் செலவு செய்தும் பயனில்லாது விழிக்கும்பொழுது, தொண்டர்கள் மட்டும் எளிதாக அவன் இருக்கும் இடத்தை அறிந்து கண்டு பேசினர். அவனுடைய ஞாபகசக்தி அபாரமானதால், அவன் யாரை எந்த நேரத்தில் காணவேணும் என்பதை மனத்திலேயே பதிய வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக் கானவரைக் கண்டு பேசிவந்தான். ஒரு சமயம் சிலருக்கு