பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி - 159 படையில் போலீஸ் வேலைக்கு என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. கிர்மான வேலைகளுக்காகவும் டெயில் ஜாரன் தக்க திட்டம் வகுத்து வேலை செய்தது. கைத்தொழில்களேப் பற்றி விசாரிக்க ஒரு கழகம் அமைக்கப்பட்டது. அக் கழகத்ை தக்கூட அரசாங்கம் சட்ட விரோதமானதென்று தடுத்தது. ஆயினும் கழகம் பல கஷ்டங்களிடையே தொழில்களே வளர்க்க ஏற்பாடுகளேச் செய்து வந்தது. எலின் பீன் இயக்கம் ஆரம்பம் முதலே அழிவு வேலையோடு ஆக்க வேலையையும் செய்யவேண்டு மென்று திட்டம் வகுத்து வந்திருந்தது. ஆர்தர் கிரிபித் ஒரு புதிய சமு தாயத்தைச் சிருஷ்டி செய்வதிலேயே கண்ணுங் கருத்து மாயிருந்தார். ஆனல் அரசாங்கத்தின் கொடுமைகளும், அடக்குமுறைகளும் எந்த ஆக்க வேலேன்யையும் செய்ய இடம் கொடுக்கவில்லை. ஆதலால்தான் ஸின் பினர்களும் எதிர்த்துப் போராடிக்கொண்டே யிருக்க நேர்ந்தது. வலின் பீன் இயக்கத்தை உடைத்தெறிவதற்குத் தாங்கள் செய்துவந்த முயற்சிகள் யாவும் பயனற்றுப் போகவே, அதிகாரிகள், சட்டம், நியாயம், ஒழுங்கு முதலியவற்றைக் காற்றில் பறக்க விட்டுவிட்டுப் புதிய அடக்குமுறை களேக் கையாள முற்பட்டனர். நூதின அடக்குமுறைகளே மனம் கூசாது கையாளு வதற்காக அயர்லாந்தின் பிரதம காரியதரிசியின் பத விக்கு ஸர் ஹமார் கிரீன்வுட் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இரக்கம் என்பதைக் கண்டறியாதவர். கல் கெஞ் சத்துடன் கொடுமைகளேச் செய்யவும், அதிகாரிகள் செய்யும் அக்கிரமங்கள் எல்லாம் நியாயமானவை என்று பிடிவாதத்துடன் சாதிக்கவும் அவரே ஏற்றவர் என்று