உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி 163 போலீஸார்ாலேயே இக்கொலே ஏற்பாடு செய்து கடத்தப் பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரி டேவிட் ாையிட் ஜார்ஜ், அயர்லாந்தின் லார்டு லெப்டினண்டு (கவர்னர் ஜெனரல்) ாைர்டு பிரெஞ்ச், அயர்லாந்தின் மாஜி பிரதம காரியதரிசி அயான் மாக்பெர்ஸன், தாற்காலிக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்மித், டிவிஷனல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளேடன், டி. ஐ. ஸ்வான்ஜி, மற்றும் பெயர் தெரியாத போலீஸார் சிலர்-ஆகிய இவர்கள் வேண்டுமென்றே கொலைக் குற்றம் செய்ததாக நாங்கள் முடிவு கூறுகிருேம்." - என்ன விரமான அறிக்கை அடிமை காட்டிலே, யதேச்சாதிகாரம் நடைபெறும்போது, மரண விசாரணை அதிகாரிகள் சிறிதும் சலனமின்றி உண்மையைப் பச் சையாகக் கூறிவிட்டனர். மக்கர்டெயினின் கொலைக்குப் பிறகு ஜில்லா இன்ஸ்பெக்டர் ஸ்வான்ஜி வடக்கே லிஸ்பர்ன் நகருக்கு மாற்றப்பட்டார். மேற்கொண்டு கார்க்கிலிருந்தால் அவர் உயிருக்கு அபாயம் விளேயுமென்.அறு அதிகாரிகள் கருதிய தாலேயே அவர் வேறிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆல்ை, காலின்ஸின் உளவு அதிகாரிகள் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டனர். உடனே கார்க் தொண்டர்கள் அங்கு சென்று அவரைச் சுட்டு க் தள்ளினர். சிறிது காலத்திற்குப் பிறகு, கார்க் நகரத் தொண் டர்கள், கிங் தெரு போலீஸ் படைவீடுகளில் இருந்தவர் களே மேயரைக் கொலை செய்தவர்களாதலால், அப்படை விடுகளையே தகர்த்துவிடவேண்டும் என்று சென்றனர். தெருவில் கடமாடுவோரிடையே வினாக உயிர்ச்சேதம்