பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"164: மைக்கேல் காலின்ஸ் ஏற்படாமலிருப்பதற்காக முதலில் ஒரு த்ொண்டன் ஆகாயத்தைப் பார்த்துச் சுட்டான். அந்த ஒசையைக் கேட்டுப் போலீஸார் யாவரும் வெளியே ஒடி ஒளிந்து கொண்டன்ர். உடனே தொண்டர்கள் படை வீடுகளில் வெடி மருந்தைக் கொட்டிக் கொளுத்தி, அவற்றைத் தரை மட்டமாக்கினர். (இங்கு பிரஸ்தாபிக்கப்பட்ட கிங் தெரு பிற்காலத்தில் மக்கர்டெயின் தெரு ' என்று புனிதமான பெயர் பெற்றது.) -- மக்கர்டெயினுக்குப் பிறகு டெரென்ஸ் மாக்ஸ்வினி கார்க் ககர மேயராக வந்தார். முந்திய மேயர் இரத்த வெள்ளத் தின் நடுவே கொலையுண்டு கிடந்ததைப் பார்த்த பிறகும், மரக்ஸ்வினி, நகரசபைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார் என்றல், தாமும் உயிர்ப் பலி கொடுக்க முன் வந்துவிட்டார் என்பதை மட்டும் இங்கே குறிப்பிடுதல் அவசியம். அவர் மிகச் சிறந்த அறிவாளி, ஐரிஷ் தேச பக்த் திலகங்களில் ஒருவர். அவ்விர கேசரி தாய்த் திரு காட்டிற்காக அடைந்த வீர மரணத்தைப் பின்னர் ക്കൂ, வேர்ம். அரசாங்கத்தின் கொலைச் சங்கங்களில் ஒன்று தர்ல்ஸ் நகரிலும் தோன்றியது. அங்கு போலீஸார் சாதாரண ஜனங்களே அடிப்பதும், கொள்ளேயிடுவதும் தினசரி நிகழ்ச்சிகள். அங்கிருந்த ஸின் பீன் தலைவர் ஜேம்ஸ் மக்கார்தி, மக்கர்டெயினப் போலவே, இருளில் கொலை செய்யப்பட்டார். தர்ல்ஸ்-க்கு அருகில் ராக் என்னும் இடத்தில் தாமஸ் டுவியர் என்பவரும் கொலே செய்யப்பட்டார். இவ்வாஅ தனிப்பட்ட ஸின்பீன் பிர்முகர்கள் வதை செய்யப்படும் வேளையில்தான், ஸர் ஹமார் கிரீன்வுட்டின் கியமனம் அறிவிக்கப்பட்டது.