பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

முன்னுரை

வைக்க அதுவே. தக்க சமயம் என்று அதிகாரிகள் ஏற்பாடு செய்ய முன்வந்தனர். வடமாகாணமான அல்ஸ்டரில் தென்பகுதியிலுள்ள கத்தோலிக்கருக்கு எதிராக ஏராளமான பிராடெஸ்டெண்டு மதத்தினரைக் குடியேற்றிவைத்தனர். தோட்டங்களைப் பயிர் செய்வதற்காக ஏராளமான மூலதனத்துடன் பல ஆங்கில முதலாளிகளும் அங்கு வந்து சேர்ந்திார்கள். வடக்கும் தெற்கும் வம்பில் மாய்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆங்கில ராஜ தந்திரிகள் அக்காலத்திலிருந்தே ஏற்பாடு செய்ததுதான் அவர்கள் அந்த மரகதப் பசுந் தீவுக்கு இழைத்த மாபெருங் கொடுமையாகும்.

17-ம் நூற்றாண்டிலும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து இரு பெருங் கலகங்கள் ஏற்பட்டன. அவைகளில் ஜனங்கள் ஜாதி மத பேதமின்றிக் கலந்து கொண்டனர். இரத்தத்தை ஆறாய்ப் பெருக்கி அரசாங்கம் இக் கலகங்களை அடக்க வேண்டியிருந்தது. விடுதலை வெறிகொண்ட கத்தோலிக்கர்க்ளை அடக்கி நசுக்குவதற்காகத் தனியாகக் கொடுஞ் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஜனங்கள் முதுகெலும்பு ஒடிந்து உணர்ச்சி மழுங்கித் தவிக்க ஆரம்பித்தார்கள்.

பின்னால் 'தேசாபிமானிகன் கட்சி' ஒன்று தோன்றியது. அதன் வேலைகளின் மூலம் தேசத்திற்குச் சிறிதளவு சுதந்திரம் கிடைத்தது. 1782-ல் டப்ளின் பார்லிமென்டுக்குக் கொஞ்சம் அதிகாரம் அளிக்கப்பட்டது. 1791-ல் பெல்பாஸ்ட் நகரில் 'ஐக்கிய ஐரிஷ்காரர் சங்கம்' அமைக்கப்பெற்றது மிக முக்கியமான சம்பவமாகும். அச்சங்கம் ரகசியமாகப் புரட்சிக்கு வேலை செய்ய முன்வந்தது. அதன் மூலம் குடியரசுக் கொள்கை பிரசாரம் செய்யப் பெற்றது. அச்சங்கத்திற்கு வுல்ப் டோன், பிட்ஜெரால்டு என்ற தீரர்கள் தலைவர்களா யிருந்தார்க்ள். இவர்கள் பிரான்ஸ் தேசத்தின் உதவிபெற்று, அந்நாட்டுப் படைகளைக் கப்பலில் அழைத்துவத்து அரசாங்கத்தை எதிர்க்கச் செய்யவேண்டும் என்று மூன்று முறை பகீரதப் பிரயத்தனங்கள் செய்தார்கள். ஆனால், மூன்று முறையிலும் வெற்றி கிடைக்கவில்லை: எதிரிகள் உஷாராக இருந்துவிட்டார்கள். கடைசி முறையில், .பிரான்ஸிலிருந்து திரும்பி ஐரிஷ் கடற்கரையில் ரகசியமாக வந்து இறங்கிய வுல்ப் டோன் அரசாங்கத்தின் கையில் சிக்கி விட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் கயிறு தம் கழுத்தில் ஏறுவதற்கு முன்னதாக, அவர் சிறு கத்தியால் தம் கையாலேயே கழுத்தை அறுத்துக் கொண்டு