பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மைக்கேல் காலின்ஸ் பிக்கவே விரதம் தொடங்கினர். சிறை அதிகாரிகள் கைதிகளுடன் ராஜி செய்துகொண்டு, மக்ராத்துடன் அவனுக்குப் பிரியமான வேறு சில கைதிகளேயும் அழைத்துக்கொண்டு போக அநுமதித்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர், ஜோஸப் மக்டோனுக், எல்லாக் கைதிகளேயும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக் கையுடன், மீண்டும் உண்ணுவிரதத்தைத் தொடங்கின்ை. 150 கைதிகள் உணவெடுக்க மறுத்தனர். லண்டனி லுள்ள ஐரிஷ் மக்கள், ஒவ்வொரு நாள் இரவிலும், சிறைக்கு வெளியே கூடி, ஆரவாரங்கள் செய்து தங்கள் அருமைத் தொண்டர்களுக்கு அதுதாபம் காட்டி வந்தனர். அவர்களேக்கூட ஆங்கில விஷமிகள் அடிக்கடி தாக்கித் துன்புறுத்தினர். பதினெட்டு நாள் அதிகாரிகள் பேசாதிருந்துவிட்டு, பின்னர் கைதிகளை விடுதலை செய்தனர். தர்ல்ஸ் நகரில் ஸின் பீன் பிரமுகர் இருவரைப் போலீ ஸ்ார் கொலை செய்த விவரம் மேலே சொல்லப்பட்டிருக்' "கிறது. அங்கிருந்த போலீஸாரில் பலர் அல்ஸ்டர் வாசிகளாதலால், அவர்கள் தேசீயவாதிகளேயும் மற்ற ஐரிஷ் மக்களையும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கி வந்தனர். ஜனங்களே அடிப்பதும், பணத்தையும் சொத்துக்களேயும் பறிப்பதும் தினசரி நடந்தன. இரவு களில் போலீஸார் நடுத் தெருக்களில் கின்றுகொண்டு, குறியில்லாமலே பல இடங்களேயும் பார்த்துச் சுட்டுக் கொண்டிருந்தனர். ஸின்பீனர்களுடைய வீடுகளுக் குள்ளும் குண்டுகள் பாய்ந்தன. முக்கியமான கட்டிடங் கள் எரிக்கப்பட்டன. இச்செயல்களால் ஜனங்களி டையே பீதி உண்டாக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.